#Phoenix வீழான் படத்தின் ‘யாரான்ட’ பாடல் வெளியீடு!

இயக்குநர் அனல் அரசு இயக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படத்தின் முதல் பாடல் “யாரான்ட” வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி தற்போது தமிழ்…

Surya ,VijaySethupathi ,Phoenix ,TamilCinema , song

இயக்குநர் அனல் அரசு இயக்கும் ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படத்தின் முதல் பாடல் “யாரான்ட” வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ‘ஃபீனிக்ஸ் வீழான்’. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : Chennai கடற்கரை – எழும்பூர் இடையே நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்! ஏன் தெரியுமா?

அண்மையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் டீசரில் சூர்யா மிரட்டலான தோற்றத்தில் வருவதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், திரைப்படத்தின் முதல் பாடலான ’யாராண்ட’ பாடல் வெளியாகியுள்ளது. வித்யா தாமேந்திரன் எழுதிய வரிகளுக்கு சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.