முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – துணிவு படத்தின் புதிய அப்டேட்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச் வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. 70% படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. துணிவு எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜீத் இடம்பெறும் ஸ்டைலான புகைப்படமும், No Guts No Glory என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹீஸ்ட் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுவரும் துணிவு படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி கா பூர்ஸ் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் LLP மற்றும் Zee Studi os இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பும் செய்கின்றனர். எச் வினோத் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 25 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷெட்யூலில் சில முக்கிய அதிரடி காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படக்குழுவினர் சர்பிரைஸாக ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த போஸ்டர்களும் இதுபோல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தைப்பூசம்; கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டு வழிபாடு

G SaravanaKumar

மேகதாது விவகாரம் – கர்நாடக அரசின் விண்ணப்பம் நீக்கம்

Web Editor

மும்பை டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்திய அணி

Arivazhagan Chinnasamy