சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.260 கோடி வசூல்!

சூர்யா நடிப்பில் வெளியான சீன் திரைப்படம் 10 நாட்களில் ரூ.260 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில், ஆவேஷம், ரோமன்சம் ஆகிய ஹிட் ப்டங்களை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘சீன்’ (Scene), கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

கண் பார்வைக் குறைபாடு காரணமாக களப்பணியிலிருந்து விலகியிருக்கும் டிஎஸ்பி இன்பராஜ் (சூர்யா), முடிக்கப்படாமல் இருக்கும் ஒரு மர்மக் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்குவதே இப்படத்தின் கதைக்களமாகும். நஸ்ரியா நசீம், நஸ்லன் ஆகியோருடன் இணைந்து சூர்யா செய்யும் காமெடி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், வெளியான பத்து நாட்களில் உலகளவில் ரூ.260 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வாஅக அறிவித்துள்ளது. 2026 -ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ், சீன் ஆகிய மூன்று படங்களும் வசூலை குவித்து மாபெரும் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.