ரஜினியை பின்னுக்கு தள்ளிய சூரி | லேட்டஸ்ட் அப்டேட்!

10 நாளில் 50 கோடி வசூலித்து ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய கருடன் திரைப்படம். இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ்…

10 நாளில் 50 கோடி வசூலித்து ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய கருடன் திரைப்படம்.

இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி – திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கருடன் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகாமல், சாதாரண படமாக ப்ரொமோட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். விமர்சனம் ரீதியாக பிரபலமான இப்படம், அடுத்தடுத்த காட்சிகளில் பலரின் கவனத்தை பெற்று வசூல் ரீதியாக பிரபலமாகி வருகிறது. முதல் நாள் வசூலில் இருந்து மிக கணிசமான வசூலித்து வரும் கருடன் திரைப்படம், தற்போது 45 கோடிகளை கடந்து 50 கோடிகள் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம்  வெளியான லால் சலாம் பட மொத்த வசூலையும் இப்படம் முந்தி சாதனை படைத்திருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.