தற்போது தனது முழு நேரத்தையும், உடற்பயிற்சி மற்றும் வலைப்பயிற்சியில் செலவிட்டு, மீண்டும் 2023 ஆம் ஆண்டு தொடரில் பங்கேற்க தீவிர முயற்சி செய்து வருகிறார்.
சிஎஸ்கே அணியின் சின்ன தல என ரசிகரக்ளால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிவருகிறார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெறியது. இதுவரை மெத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் கலந்துக்கொண்ட ர்ரெனா 5528 ரன்களை குவித்து ஐபிஎல் தொடரின் அனுபவம் மிக்க வீரராக கருதப்படுகொறார்.
பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல் தொடர்களிலும் அவர் சரியாக விலையாடவில்லை. அவரின் ஆவேசமான ஆட்டத்தை பார்க்க விரும்பிய ரசிகர்களிக்கு ஒவ்வொரு போட்டியிலும் அவரின் ஆட்டம் ஏமாற்றத்தையே தந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதற்கு அவரின் உடல் எடை கூடியதும் காரணமாக கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டிவருகிறார். 35 வயதான சுரேஷ் ரெய்னா கடந்த தொடரில் ஒரு அணி கூட தன்னை வாங்காத நிலையில் தனது ஆதரவு அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் கூட சுரேஷ் ரெய்னாவை வாங்க முன்வரவில்லை.எனவே தற்போது தனது முழு நேரத்தையும் உடற்பயிற்சி மற்றும் வலைப்பயிற்சியில் செலவிட்டு, மீண்டும் 2023 ஆம் ஆண்டு IPL தொடரில் பங்கேற்க தீவிர முயற்சி செய்து வருகிறார். இதனால் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் பெரிய முன்னேற்றத்துடன் ஏலத்தை சந்திக்க சுரேஷ் ரெய்னா தயாராகி வருவதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு நல்ல ஏலத்திற்கு எடுக்கப்பட்டு, IPL-லில் எதாவது ஒரு அணியில் இடம்பிடிப்பார் என்ற நம்மிக்கையில் அவரும் அவரின் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.