முக்கியச் செய்திகள்உலகம்இந்தியா

சாலை விபத்துகளில் உயிரிழந்த பிரபலங்கள்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி, கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாலை விபத்துகளில் உயிரிழந்த முக்கிய பிரபலங்கள் குறித்து தற்போது காணலாம்..

 

கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பட்ட கார் விபத்தில் இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானா ( DIANA)உயிரிழந்தார். புகைப்படக்காரர்கள் பின் தொடர்ந்ததால் அதிவேகத்தில் அவர் காரை இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியது. இதில் டயானா உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்டி ராமாராவின் மகனும், பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமூரி ஹிரிகிருஷ்ணா, ( NANDAMURI HARIKRISHNA) கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி நல்கொண்டா மாவட்டத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். தெலுங்கு திரைப்பட துறையில் பிரபல நடிகராக விளங்கும் ஜூனியர் என்டிஆரின் தந்தைதான் ஹிரிகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவ சங்கிராம் (Shiv Sangram) கட்சித் தலைவரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை முன்னாள் எம்எல்சியுமான விநாயக் மேத்தே, ( VINAYAK MEHTE)கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி கோர கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சந்திப்பதற்காக புனேவில் இருந்து மும்பை வந்துகொண்டிருந்தபோது, அவரது கார் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

பஞ்சாபை சேர்ந்த பிரபல நடிகரும், இயக்குனருமான ஜஸ்பால் சிங் பட்டி, (JASPAL BHATTI)ஜலந்தர் மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். பிளாப் ஷோ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த ஜஸ்பால் பட்டி, இந்தி மற்றும் பஞ்சாப் மொழிகளில், பல படங்களில் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ( ANDREW SYMONDS)ஆஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில் நகரத்தில் சென்றபோது அவரது கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் மரணமடைந்தார்.

 

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் நடுவரான ரூடி கோர்ட்சன், (RUDI KOERTZEN) கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கேப் டவுனில் இருந்து வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் வந்த கார் சாலை விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.

 

– இரா.நம்பிராஜன்

twitter id: https://twitter.com/Nambijournalist

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மஹாராஷ்டிரா அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம் – முதலமைச்சர் அதிரடி

Mohan Dass

ஆஸ்திரேலிய கடற்படை குழு இந்தியா வருகை – இருதரப்பு கடற்படை உறவு குறித்து ஆலோசனை!

Web Editor

கோடநாடு வழக்கு: சசிகலாவிடம் விசாரணை நிறைவு

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading