இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை அகற்றி புது கட்டிடம் கட்டி தர கோரியும், பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் புதுகும்முடி பூண்டி பகுதியில் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்றும் சிறுபுழல் பேட்டை பகுதியில் பொது மக்கள் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்ததனர்.
அத்துடன், சிப்காட் மற்றும் மாதர்பாக்கம் பகுதியில் வழிபாட்டுத்தலம், திருமண மண்டபம், அருகில் இருக்கும் அரசு மதுபான கடையால் தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அதை தொடர்ந்து அந்த மதுபான கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அரசுத்துறை அதிகாரிகள் முறையாக வருவதில்லை என்றும், தங்கள் பகுதி பிரச்சனைகளை தெரிவிக்க முடியவில்லை என்றும் , கூட்டத்தில் பங்கேற்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோ. சிவசங்கரன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்