கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக டெல்லியின் போராட்டக்கள பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை அரசு நீக்கிவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிகர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தெகத்ராய் ஆஜராகி, போராட்டம் காரணமாக என்.டி.எம்.சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக திடீரென கடைகளை திறக்க கூடாது என்ற உத்தரவு பிறக்கப்பட்டு வருகிறது.

தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக ‘கன்னாட் பிளேஸ்’ பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்கா மூடப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை சுமார் 250 கோடி ரூபாய் காண வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால் இந்நேரத்தில் வணிகர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவும், எனவே போராட்டத்திற்கும் தடை விதிப்பதோடு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள், மனிதர்கள் சிறு சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் போராட்டத்தாலும், கட்டுப்பாடுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். எனவே இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அதுவேளையில் இந்த நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஒரு தரப்பினர் போராடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அது அரசியல் சாசன உரிமை என்றும் கூறுகிறார்கள், ஒரு தரப்பினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள், மற்றொரு தரப்பினர் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே இது அனைத்தையும் ஆராய்ந்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஆனால், வர்த்தகம் தொடர்ந்து கடும் பாதிப்பை சந்தித்தால் உச்சநீதிமன்றம் தலையிடும் என்று உறுதி அளித்தனர். மேலும், இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை 26ம் தேதிக்கு விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.