கைதிகளுக்கு பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம்…

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவருக்கும், மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், நீதிமன்றங்களின் உத்தரவுபடி ஏற்கனவே பரோல் வழங்கப்பட்ட அனைவருக்கும், மீண்டும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

டெல்லி, திகார் உள்ளிட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை இணையத்தில் வெளியிடுவதுபோல், பிற மாநிலங்களிலும் அந்த நடைமுறையை பரிசீலிக்க வேண்டும் எனவும், விடுவிக்கப்படும் கைதிகள் செல்லும் மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருந்தால், அவர்கள் பாதுகாப்புடன் வீடு சென்றுசேர போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் கூறியுள்ளனர். அதேநேரத்தில் பிணையில் செல்ல விரும்பாத கைதிகளுக்கு உரிய மருத்துவ வசதிகளை சிறையில் செய்து கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.