டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமாருக்கு ஜூலை 11ஆம் தேதி வரை துணைநிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி உமேஷ்குமார் டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உமேஷ்குமாருக்கு ஜூலை 11ஆம் தேதி வரை துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







