ட்விட்டரின் TweetDeck சேவையை இனி சரிபார்க்கப்பட்ட கணக்கு உள்ள பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்துள்ளார்.
அண்மையில், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளவர் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதற்கான வரம்பை ட்விட்டர் நிறுவனம் நிர்ணயித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தற்போது அடுத்த அதிரடி நடவடிக்கையாக ட்விட்டர் நிறுவனம் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இனி TweetDeck சேவையை வெரிஃபைடு அதாவது சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்கு உள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். TweetDeck பயன்படுத்த விரும்பும் பயனர்கள் இன்னும் 30 நாட்களுக்குள் தங்களின் கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் ட்விட்டர் நிறுவனம் பழைய, புதிய வெர்சன் ட்வீட்டெக் என எதைப் பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்குமா இல்லை புதிய மேம்படுத்தப்பட்ட ட்வீட் டெக் வெர்சனுக்கு மட்டுமே கட்டணமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படாத நிலையில், பயனர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ட்விட்டர் நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இதற்கிடையில் , ட்விட்டரில் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 600 போஸ்ட்களையும், புதிய கணக்கு தொடங்கியவர்கள் நாள் ஒன்றுக்கு 300 ட்விட்களையும் போஸ்ட் செய்ய முடியும். சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6,000 போஸ்ட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் கடந்த சனிக்கிழமையன்று தான் அறிவிப்பு வெளியிட்டார். மஸ்கின் இந்த அறிவிப்புக்கான எதிர்ப்பலைகள் அடங்குவதற்குள் ட்வீட் டெக் பயன்பாட்டுக்கு கெடுபிடி விதித்துள்ளார் மஸ்க்.
https://twitter.com/TwitterSupport/status/1675990712297443330?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








