உச்சநீதிமன்றத்தின் தலைமை கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் நீதிபதியுமான அருண் மிஷ்ரா மற்றும் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முநிஷ்வர் நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளி விழாவில் தான் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார். 1993ஆம் ஆண்டு மாநில மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டாலும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஆனது 1997 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி என கூறினார்.
110-விதியை பயன்படுத்தி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அன்றைக்கு வெளியிட்டார். மாநிலத்தில் மனித உரிமை ஆணையம் அமைக்க வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு முதல் தெரிவித்து வந்த நிலையில், ஒன்றிய அரசிடமிருந்து இது தொடர்பாக தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வந்தாலும் ஐந்தாண்டு காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
பேச்சுரிமை, எழுத்தூரிமை, எண்ணங்களை வெளியிடக்கூடிய உரிமை, ஒன்று கூட கூடிய உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை பாதிக்கப்பட்ட அதற்கான தீர்வு காணக்கூடிய உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அதனை காக்க உரிமை அனைத்து அரசுகளுக்கும் உள்ளது என தெரிவித்தார்.
அந்த கடமையிலிருந்து நாங்கள் ஒரு நாளும் தவறமாட்டோம் என்ற உறுதியை ஆரம்பிக்கப்படுகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை கிளையை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
– இரா.நம்பிராஜன்