CSKvsDC டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற துணை நடிகை – நியூஸ்7 தமிழின் கள ஆய்வில் அம்பலம்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஆடிய போட்டி டிக்கெட்டுகளை துணை நடிகை கள்ளச் சந்தையில் விற்றது நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின்…

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஆடிய போட்டி
டிக்கெட்டுகளை துணை நடிகை கள்ளச் சந்தையில் விற்றது நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும் அவர் தலைமை வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழ்நாட்டில்  தனி ரசிகர் பட்டாளமே
உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிரம்பி வழியும். இப்போட்டிக்கான டிக்கெட்கள் கிடைப்பதில் பெரும் சிரமமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டிக்கெட்கள் விற்பனை அறிவித்த சில நில நிமிடங்களியே கவுண்டர்களிலும், ஆன்லைனிலும் விற்று தீர்ந்து விடுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை நடைபெறும் தினம்  காவல்துறை தடியடி நடத்தும் அளவிற்கு டிக்கெட்கள் வாங்குவதற்கு ரசிகர்கள் தீவிரம் காட்டினர். மேலும் கள்ளச் சந்தையில்  டிக்கெட் விற்பனை செய்தவர்களும் கைது
செய்யப்பட்டனர். இருப்பினும் பிளாக்கில் டிக்கெட் விற்பனை படு ஜோராக நடைபெற்று
வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டு பிளாக்கில் டிக்கெட்
விற்பனையில் ஈடுபட்டுள்ளார் துணை நடிகை கும்தாஜ். திரைப்படங்களில் சிறு சிறு
வேடங்களில் நடித்து வரும் அவரது வாட்சப் ஸ்டேட்டசில் 1500 ரூபாய் மதிப்புள்ள ஒரு
டிக்கெட் 5000 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நியூஸ் 7 செய்தியாளர்கள் கார்த்திக் மற்றும் விக்னேஷ் அவரிடம் டிக்கெட் வாங்குபவர்கள் போல பேசினர். அப்போது தான் இன்னொருவரிடம் 5000 ரூபாய்க்கு வாங்கியதாகவும் அதை அப்படியே விற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல தனியார் தொலைகாட்சியில் காமெடி நிகழ்ச்சியில்  பங்கேற்கும் நடிகர் நாஞ்சில் விஜயன் தனது வாட்சப் ஸ்டேட்டஸில் 1500 மதிப்பிலான டிக்கெட் 6500 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதாக பதிவிட்டுள்ளார். அந்த டிக்கெட்டை அவருக்கு கொடுத்ததே கும்தாஜ் தானாம். அதையும் அவரே தெரிவித்தார்.

பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வோரை கைது செய்த காவல்துறை பிரபலங்களை கைது செய்யாதா எனவும், ஸ்டேட்டஸ் போட்டு விற்கும் அளவிற்கு  நிலை உருவாகியுள்ளது என வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காத  ரசிகர்கள் புலம்புகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.