ஜூன் 22ல் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி : அதிபர் ஜோபைடனுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை.!

ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செல்ல உள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக…

ஜூன் 22ம் தேதி அமெரிக்கா செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செல்ல உள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக ஜூன்  மாதம் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர்  ஜோ பைடனை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருக்கு விருந்து அளிக்க உள்ளதாக  அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின்  ஊடக செயலாளர் கரின் ஜீன் பியரி தெரிவித்ததாவது.. ” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வருகிறார். இப்பயணம், அமெரிக்கா-இந்தியா இடையில் ஆழமான நட்பினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பயணத்தின் போது பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் தொழில்நுட்ப உறவை வலுப்படுத்தல், பருவநிலை மாற்றம், சுகாதார பாதுகாப்பு  சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றில்  இணைந்து பணியாற்றுவது குறித்து இந்த சந்திப்பு அமையும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதிப்படுத்தியுள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் “ அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில், பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அடுத்த மாதம் ஜூன் 22-ந் தேதி, ஜோபைடன் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்கிறார்.” என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.