கோட்டையில் தீட்டும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என
பேரூராட்சி தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, தந்தை பெரியார் எண்ணியவாறு இந்த அரசு பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி வருவதாக கூறினார். அரசு தீட்டும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகிகளிடம் தான் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்களாட்சியின் மாண்புகளையும், ஜனநாயகத்தின் நெறிமுறைகளையும் காப்பதில், தமிழ்நாடு எப்போதும் முதன்மையான மாநிலமாக இருக்கும், முதன்மையான அரசாக திமுக இருக்கும் என்பதை உறுதியோடு உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறிய அவர், மக்களோடு மக்களாக இருந்தால் தான் மக்கள் நமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்றும், மக்களோடு மக்களாக இருந்ததால் தான் 2-வது முறையும் மேயராக தேர்வு செய்யப்பட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.