“திமுக கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. திமுக கூட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பயனாளிகள் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதியாக மட்டுமல்லாமல் களத்திலேயே கண்கூடாக தெரிகிறது.
2026 தேர்தல் தீர்ப்பு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, மக்களின் ஆதரவு பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.