தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், இன்று தமது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் உச்சம் தொட்ட பயணத்தை பார்க்கலாம். ஸ்டைல், மாஸ், நகைச்சுவை என அன்று முதல் இன்று வரை தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும், இயல்பான பாவனைகளாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடகாவில் சிவாஜி ராவ் கெயிக்வாட்டாக பிறந்தவர் இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் இருக்கும் அர்ப்பணிப்பும், உழைப்பும் சாதாரணமானது அல்ல.
பேருந்து நடத்துநராக இருந்த ரஜினிகாந்த்தை இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் பார்க்கவில்லை என்றால், இன்று தமிழ் சினிமாவின் பாதை மாறி இருக்காது.
1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் பிரம்மிக்க வைத்த ரஜினிகாந்த் 47
ஆண்டுகளில் 169 படங்கள் நடித்து அசைக்க முடியா இடத்தை பிடித்திருக்கிறார். 80ஸ், 90ஸ், 2கே கிட்ஸ் என அனைவர் மனதிலும் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.
தற்போதைய சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு திரைப்படம் திரையரங்கில் ஓடினாலே வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடும் நிலையில் ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனையும் படைத்துள்ளது. நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த மனிதராகவும் தன்னால் முடிந்த உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார்.
இந்திய சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மேலும் பல சாதனைகள் படைக்க நாமும் வாழ்த்துவோம்.
– தினேஷ் உதய்