அரசியலுக்கு வருவேன் என்றும் விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பேன் என்றும் நடிகரும் தொழிலதிபருமான லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.
.தி லெஜெண்ட் திரைப்படம் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், தமிழகத்தில் மட்டும் 650 திரையரங்குகளில் வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திற்கு அந்தந்த மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், சரவணன் நடிக்கும் அடுத்த படமும் பான் இந்திய அளவில் தயாரிக்கப்படுவதாகவும், சரவணன் நடிக்கும் புதிய படம் சமூக அக்கறையோடு கூடிய படமாகவும் சரவணா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிக்க உள்ளதாக லெஜன்ட் சரவணன் தெரிவித்துள்ளார். கோவை கோல்டு விங்ஸ் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தொழிலதிபரும், நடிகருமான லெஜன்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னைக்கு பிறகு கோவை பெரிய வளர்ச்சியை நோக்கி
செல்கிறது. லெஜன்டு படத்தை தொடர்ந்து, அடுத்த திரைப்படம் குறித்து விரைவில்
அறிவிக்க உள்ளேன். அரசியலுக்கு வருவது மக்கள் மற்றும் மகேசன் கையில் உள்ளது.
மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன். மக்களின் அரசியல் சிந்தனை வளர்ச்சி வேகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சி மிக சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.








