முக்கியச் செய்திகள் சினிமா

பிறந்த நாள் வாழ்த்து கூற காத்திருந்த ரசிகர்கள்; லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்

ரஜினிகாந்த் பிறந்தநாளன்று அவரை காண காத்திருந்த ரசிகர்களிடம் ரஜினிகாந்த் ஊரில் இல்லை, எனவே மழையில் காத்திருக்காமல் கலைந்து செல்லுங்கள் என லதா ரஜினிகாந்த் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லம் முன்பு கேக் வெட்டி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினியின் உருவம் பதித்த கேக்கை வெட்டி, உற்சாகமாக கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல் கரூர் மாவட்டத்தின் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில்  ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கேக்வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பொன் அமுதா திரையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 13 கிலோ கொண்ட கேக்கை வெட்டி ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது ரசிகர்களை கலைந்து செல்ல லதா ரஜினிகாந்த் உத்தரவிட்டார்.

தனது வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் ஊரில் இருந்திருந்தால் ரசிகர்களை சந்தித்து இருப்பார். அவர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் கலைந்து சென்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தல் – அன்புமணி ராமதாஸ்

Halley Karthik

அதிமுக பொதுக்குழு வழக்கு; ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு

Arivazhagan Chinnasamy

“விவசாயிகள் நலனே பிரதானம்” -பிரதமர் மோடி

G SaravanaKumar