முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு செய்திகள் சினிமா

பிரபல நடிகர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு ’சீல்’

பிரபல நடிகர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டையை உலுக்கி எடுத்திருக்கிறது. ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் இன்னும் முழுமையாக கொரோனா, நீங்கிவிடவில்லை. அது உருமாறிகொண்டே இருக்கிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக மும்பை இருக்கிறது. இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, கொரோனா காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், ஜீவா இயக்கிய 12 பி, ரஜினியின் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் வீடு, தெற்கு மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்கிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா பரவாமல் தடுக்க மொத்த அடுக்குமாடி குடியிருப்புக்கும் சீல் வைத்துள்ளனர்.

மும்பை மாநகராட்சியின் உதவி ஆணையர் பிரஷாந்த் கெய்க்வாட் கூறும்போது, இந்த பிருத்வி அபார்ட்மென்ட்டுக்கு நாங்கள் சீல் வைத்திருக்கிறோம். இப்போது குடியிருப்புக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே இருந்து யாரும் வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பார்டி!

Ezhilarasan

மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி

ஒலிம்பிக் கொடியில் 5 வளையங்கள் ஏன்?

Vandhana