”பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அபாரம்”- சுந்தர் பிச்சை புகழாரம்

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவேகமாக அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவேகமாக அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடியையும் அவர் இன்று சந்தித்து பேசினார். வளரும் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் அமைப்பான ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அதற்கு தேவையான ஒத்துழைப்பை கூகுள் நிறுவனம் வழங்கும் என அப்போது பிரதமர் மோடியிடம் சுந்தர்பிச்சை உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்துபதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததற்காக நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜி20 தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும், அனைவருக்கும் இணைய வசதி கிடைப்பதற்கு உதவுவதையும் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும்  சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து தனது பிளாக்கில் எழுதியுள்ள சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவை வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்துவது போன்றவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.