வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கடும் சீற்றமாக
காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் ,
வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் சீற்றமாக காணப்படுவதால்இன்று மீன்
பிடிக்க பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் பைபர்படகுகள் மற்றும் மீன்பிடி
வலைகளை கரையிலிருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள்
பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.







