திமுக – அதிமுக கூட்டணி என்பது அவதூறு தகவல் : ஓ. எஸ். மணியன் பேட்டி…!

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக கூறுவது அவதூறான தகவல் என்று இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ் . மணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால் அதிமுக இரு தரப்பாக பிரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்று ஒரு தரப்பினரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளை சந்தித்தனர். அப்போது ஓ.எஸ். மணியன் கூறியதாவது ;

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். இதற்கான அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்து போட்டுள்ள கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.

திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக அவதூறான தகவலை சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சி.வி.சண்முகம் இவ்வாறு பேசி வருகிறார். அதிமுகவன் பிளவை முதலமைச்சர் விஜய் ஆதரிக்க மாட்டார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.