முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான குமரி அனந்தனின் மனைவி யும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயுமான கிருஷ்ணகுமாரி, உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவர் உடல் தெலங்கானா வில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.  இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது.

இந்த தகவலை ட்விட்டரில் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உற்ற துணையை இழந்து வாடும் குமரி அனந்தனுக்கும், தாயை இழந்த துயரத்தில் உள்ள தமிழிசை சவுந்தரரா ஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஜம்மு விமானப்படை தளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் சீன தயாரிப்பு!

Halley karthi

நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

Gayathri Venkatesan

சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்க வேண்டியவர்: மாதவராவ் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

Jeba Arul Robinson