உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சை பெரிய கோயிலை சேர்க்க பரிந்துரை : இல. கணேசன் உறுதி!

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்கப் பரிந்துரை செய்யப்படும் என நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான…

உலக அதிசயங்கள் பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்கப் பரிந்துரை செய்யப்படும் என நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது. இந்த கோயில் மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

இந்நிலையில், அம்மன்பேட்டையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் இன்று காலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் அவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :

நான் இந்த ஊரை சேர்ந்தனவன். பெரிய கோயிலுக்கு பலமுறை வந்துளேன். நான் ஆன்மீகத்தையும், தேசியத்தையும் நம்பக்கூடியவன்.தஞ்சாவூர் பெரியகோயிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. . உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரியகோயிலை சேர்க்க நானும் பரிந்துரை செய்வேன் என இல.கணேசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.