இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராகும் இந்திய வம்சாவளி எம்.பி. ?

பிரிட்டனில் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் லிஸ் டிரஸ்  மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

பிரிட்டனில் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் லிஸ் டிரஸ்  மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் லிஸ் ட்ரஸ்  பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் லிஸ் பெயர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், உள்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ட்ரஸ்ஸின் அமைச்சரவையில்  மற்றொரு  இந்திய வம்சாவளி எம்பியான சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்படக் கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நியமிக்கப்பட்டால், பிரிதி படேல், சஜித் ஜாவித் ஆகியோருக்குப் பிறகு மூன்றாவதாக உள்துறை அமைச்சராக சுயெல்லா பிராவர்மேன் பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இங்கிலாந்து அமைச்சரவையில் உள்ளே வெளியே ஆட்டம் தொடங்கியுள்ளது.

யார் இந்த சுயெல்லா?

இங்கிலாந்தில் 1960ஆம் ஆண்டு கிறிஸ்டி மற்றும் உமா பெர்னாண்டசுக்கு மகளாகப் பிறந்தார் சுயெல்லா. அவரது தாய் மொரீஷியஸ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவாவைச் சேர்ந்தவர். லண்டனுக்கான முன்னாள் மொரீஷியஸ் தூதர் மஹேன் கந்தசாமிக்கு உறவினராவார் சுயெல்லா. கடந்த 2018 ஆம் ஆண்டு ரால் பிராவர்மேனைத் திருமணம் செய்துகொண்ட சுயெல்லாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் 2வது சுற்றுவரை இருந்தவர் சுயெல்லா என்பது குறிப்பிடத்தக்கது.

-மகேஸ்வரி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.