இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்ஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
பலகட்டமாக நடைபெற்ற இத்தேர்தலின் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த் லிஸ் டிரஸ் மற்றும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த் ரிஷிசுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். தொடக்கத்தில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக காணப்பட்டது.
இந்த பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியை தழுவினார். இங்கிலாந்தின் பிதிய பிரதமராக டிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் இவர் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்ஸூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக லிஷ் டிரஸ்ஸூக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையின் கீழ், இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மை மேலும் பலப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். உங்கள் புதிய பொறுப்புகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.







