கோவையில் வீட்டில் இருந்த யூபிஎஸ் பேட்டரி எரிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது மகள்களான அர்ச்சனா மற்றும் அஞ்சலியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் இருந்த யூபிஎஸ் பேட்டரி எரிந்ததில், வீடு முழுவதும் புகை பரவியுள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்து அதிகளவில் புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை: கர்நாடக உயர்நீதிமன்றம்
தகவல் அறிந்து வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் விஜயலட்சுமி மற்றும் அஞ்சலி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். யூபிஎஸ் பேட்டரி எரிந்ததில் வெளியான புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.