முக்கியச் செய்திகள் இந்தியா

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை’ : கர்நாடக உயர்நீதிமன்றம்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு, கல்வி நிறுவனங்கள் தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் 18 பேர், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கிய வழக்கு விசாரணையின் முதல் நாளிலேயே கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புகளுக்கு வர தடை விதித்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விசாரணையின் நிறைவு நாளில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை என்று உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்,

அண்மைச் செய்தி: திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: விண்ணதிர முழக்கமிட்ட பக்தர்கள்

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. மேலும், ஹிஜாப் அணிய தடை விதித்தற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500: அதிமுக வாக்குறுதி!

EZHILARASAN D

கொரோனா அறிகுறி உள்ளவர்களின் விவரங்கள் தேவை

Web Editor

குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதே இலக்கு- முதலமைச்சர்

G SaravanaKumar