மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா மட்டும் விலையை உயர்த்திய மத்திய அரசு, ஒரு கிலோ உரத்துக்கு 15 ரூபாய் வரை விலையை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். சாகுபடிக்கு தேவையான அடியுரமான டை-அமோனியம் பாஸ்பேட் உரத்தின் விலை ஆயிரத்து 250-ல் இருந்து ஆயிரத்து 900-ஆக, 60 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்திருப்பதால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளை, விவசாயப் பணியில் இருந்து வெளியேற்றுவன் யுக்தி தான் உர விலை உயர்வு என வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், மானிய விலையில் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.







