முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

குடியரசு தினத்தன்று விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டங்களை திரும்பப் பெறவில்லை எனில் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதனை தடை செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதுபற்றி டெல்லி காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டுமென ஏற்கனவே தெரிவித்துள்ளதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார். மத்திய அரசின் கீழ் உள்ள டெல்லி காவல் துறைக்குத்தான் போராட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு வர வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு, வழக்கையும் விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

தொடர்ந்து, நாங்கள் வேளாண் சட்டங்களை அனுமதித்தால் நீங்கள் போராட்டத்தை தொடரலாம், ஆனால் அமைதி தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு, விவசாயிகள் சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், விவசாயிகள் டெல்லிக்கு வெளியே ரிங் சாலையில் குடியரசு தினத்தை மட்டும் அமைதியான முறையில் கொண்டாட விரும்புகின்றனர் என்றும், அமைதியை குலைக்க முயலவில்லை என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியால் நேர்ந்த கொடூரம்

G SaravanaKumar

சென்னை மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்

G SaravanaKumar

வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

EZHILARASAN D

Leave a Reply