முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் Instagram News

டாம் குரூஸ்-க்கே சவால் விடும் ஸ்டண்ட் கொள்ளையர்கள்; 90 கி.மீ வேகத்தில் ஓடும் பேருந்தில் ஏறி கைவரிசை!

கோவையில் இருந்து ஒடிசாவுக்கு ஆன்மீகப் பயணம் சென்ற சுற்றுலா பயணிகளின் உடமைகளை ஓடும் பேருந்தில் ஏறி கொள்ளையடித்த இளைஞர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும்
சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த
28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோவில்
உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் காசி உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு சென்று விட்டு 7ம் தேதி இரவு
ஒரிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு உணவை
முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்துகொண்டிருந்த போது அதிகாலை 4 மணி
அளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே நின்ற போது பேருந்தின் மேல்
பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த
ஓட்டுனர், உதவியாளர் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்துள்ளார்.

அப்போது சிலரின் உடைமைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவன் ஓடும் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் அப்பேருந்தில் தாவி ஏறுவதும் பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளைக் கீழே வீசுவதும் பதிவாகி இருந்தது. அத்துடன் ஓடும் பேருந்திலிருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இந்த பதற வபைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram