யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதிய மாணவர்கள்!

மதுரையில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. ஆனால் மற்ற போட்டிகள் போல் இல்லாமல்…

மதுரையில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதுரை வில்லாபுரத்தில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் விதமாக திருக்குறள் எழுதும் போட்டி நடைபெற்றது. ஆனால் மற்ற போட்டிகள் போல் இல்லாமல் இது சற்று வித்தியாசமாக நடத்தப்பட்டது. ஏனென்றால் இதில் கலந்து கொண்ட மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே திருக்குறள் எழுதி அசத்தியுள்ளனர்.

இதில் பத்திற்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினார். இந்த திருக்குறள் எழுதும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அசார், சல்மான் சகோதரர்கள் பல்வேறு யோகா சாதனைகள் மூலம் இந்திய அளவில் மற்றும் சர்வதேச அளவில் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply