கேரள மாநிலத்தில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருவாங்கூர் அரசு பள்ளியில் பயின்று வரும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பேனா, பென்சில்கள் கொண்டு பெஞ்சில் தாளம் போட்டு தங்களது கலைத்திறமையை வெளிபடுத்தினர். இதனை அவ்வழியாக வந்த ஆசிரியர் ஒருவர் தனது போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, தனது முகநூல் பக்கத்தில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி வாழ்த்து தெரிவித்தார்.







