பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்; துணைத் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை அடுத்து வரும் துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ்…

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை அடுத்து வரும் துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், 26 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 1,95,292 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும், 2,25,534 பேர் 10-ம் வகுப்பு தேர்விலும், 2,58,641 பேர் 11-ம் வகுப்பு தேர்விலும் என்று 6,79,467 பேர் தேர்வு எழுத செல்லவில்லை.

அண்மைச் செய்தி: ‘தரமற்ற மின் இணைப்பு; வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தொடர் தீ விபத்து ’

அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத செல்லாமல் இருந்தது கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரங்களை சேகரித்து அடுத்த மாதம் நடைபெறும் துணைத் தேர்வில் பங்குகொள்ள செய்ய தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

https://twitter.com/news7tamil/status/1532185953582071808

கொரோனா தாக்கம் காரணமாக 6.79 லட்சம் பேர் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க வைக்கும் நடவடிக்கைகளை கல்வித்துறை துரிதப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.