தரமற்ற மின் இணைப்பு: வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தொடர் தீ விபத்து

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற மின் இணைப்புக் கம்பிகளால் கடந்த 3 ஆண்டுகளில் 5 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள தரமற்ற மின் இணைப்புக் கம்பிகளால் கடந்த 3 ஆண்டுகளில் 5 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ‘சி’ பிளாக்கில் அதிகாலை 3.45 மணி அளவில் மின் இணைப்பு கம்பிகளில் தீ விபத்து ஏற்பட்டது. 40 நிமிடங்கள் போராடி தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நான்கு பிளாக்குகள் கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 2018 முதல் மக்கள் குடியேறி வந்தனர். 2019 இல் ஒரு முறை, 2020 இல் ஒரு முறை, 2021இல் இருமுறை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2022இல் தற்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரமற்ற மின் இணைப்புக் கம்பிகளால் தீ விபத்து ஏற்படுவதாக குடியிருப்புதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பெரும் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இப்பிரச்னையில்உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.