ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்
தொழில் நுட்பபூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட தை கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆண்டகலூர்கேட் பகுதியில் உள்ள
திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ
மாணவிகள் இரு பகுதி நேர பிரிவுகளாக பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு நாமக்கல் மாவட்டத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்காக இந்த கல்லூரி வளாகத்திற்குள் 3 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்ததை தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்குள் தொழில் நுட்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 1000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி முதல்வர் பானுமதி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.
—ம. ஸ்ரீ மரகதம்







