சாதனை படைத்த ‘பாராசைட்’ திரைப்படம் -ஹாலிவுட் தொடாத இமாலய உச்சத்தை தொட்டு அசத்தல்!!

லெட்டர்பாக்ஸ் திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு மில்லியன் 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்ற முதல் திரைப்படமாக பாராசைட் இடம்பெற்றுள்ளது.  ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆண்டிற்கான 92 வது…

லெட்டர்பாக்ஸ் திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு மில்லியன் 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்ற முதல் திரைப்படமாக பாராசைட் இடம்பெற்றுள்ளது. 

ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அயல்நாட்டு திரைப்படமான பாரசைட் இந்தமுறை அதிக விருதுகளை பெறும் என்று முன்னரே பலரும் கணித்தனர்.

அதுபோல இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் நான்கு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த படத்திற்கான விருதினை அயல்நாட்டு திரைப்படத்திற்கு வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.


தென்கொரிய படமான  ‘பாரசைட்’ படத்தை பாங் ஜூன் ஹோ இயக்கியிருந்தார். தென் கொரியாவின் பொதுவாக அரசியல், சமூக அக்கறைக்கொண்ட படங்கள் என்றால் நன் தமிழ் சினிமா போல ஓவராக மக்களின் மீது அக்கறைக்கொண்டு பிரச்சார நெடி அடிக்கும் வகையில் கதையும், கருத்து, வசனங்களும் இருக்கும்.

ஆனால் பாரசைட்டில் அப்படியில்லாமல் யதார்த்தமான வர்க்க பிரச்சனையையும், ஏழைக்கு பணக்காரர்கள் மீது இருக்கும் பார்வையையும், பணக்காரர்களுக்கு ஏழைகள் மீது இருக்கும் பார்வையையும் நேர்த்தியாக திரைக்கதையில் சிறப்பாக அமைத்திருப்பார் பாங் ஜூன் ஹோ. இயக்குனர் படத்தை காமெடியாகவும் த்ரில்லராகவும் கையாண்ட விதம் பெரும்பாலானவர்களை கவர்ந்தது.

மேலும் இப்படம் உலக அரங்கில் பல முக்கிய சர்வதேச விருது விழாக்களிலும் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன்பின் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்பட்ட பாரசைட், பல வாரங்கள் தியேட்டர்களில் மக்கள் கூட்டத்தை ஈர்த்து வசூலை வாரிக்குவித்தது.

https://twitter.com/letterboxd/status/1638261743183974409?s=20

இப்படி பல சர்வதேச மேடைகளில் சாதனை படைத்த  இப்படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன பல திரைப்பட தரவுதலங்களில் பல சாதனைகளை புறிந்து வருகிறது. குறிப்பாக லெட்டர்பாக்ஸ்  திரைப்பட தரவுத்தளத்தில் ஒரு மில்லியன் 5-நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்ற முதல் திரைப்படமாக பாராசைட் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.