போதைக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும்- இறையன்பு

போதை மற்றம் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.  சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை…

போதை மற்றம் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். 

சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு மாணவருக்கும் சிற்பமாக மாறும் ஆற்றல் உண்டு, அதற்கான தேவையும் உண்டு. மாணவர்கள் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்கள். மாணவர்கள் ஒழுக்கமும், பண்பும், அறமும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது சிற்பி திட்டம் என்றார்.

போதை மற்றும் மதுவுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் உருவெடுக்க வேண்டும். சக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக சிற்பி மாணவர்கள் விளங்க வேண்டும். மனிதரும், சிம்பன்ஸியும் ஒன்று. சிற்பி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, காவல்துறையினர் செதுக்க உள்ளனர். ஒன்றை ஒன்று பார்த்து கற்றுக்கொள்ளும் வழக்கம் உடையவர்கள் என்று கூறினார்.

 

தொடர்ந்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, முதலமைச்சருக்கு குழந்தைகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்கும் முதலமைச்சரைப் பிடிக்கும். முதலமைச்சருக்கும், குழந்தைகளுக்கும் நல்ல கெமிஸ்டிரி உள்ளது. காவல்துறையை முதலமைச்சருக்கும் பிடிக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

காவல்துறை உங்களின் நண்பன். BMW என்பது கார்; ஆனால் இது BIW. Best In the World என்ற திட்டமே இது ; அதுவே சிற்பி. குடும்ப சூழல் சரியில்லாத மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமே சிற்பி. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தான் சிற்பி திட்டத்தின் சிற்பி என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.