B.E., B.Tech., படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

B.E., B.Tech., மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்ததுள்ளது.  தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 24 வரை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 500 கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது.…

B.E., B.Tech., மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தைக் கடந்ததுள்ளது. 
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 24 வரை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 500 கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் http://www.tneaonline.org, அல்லது http://www.tndte.gov.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்ப பதிவு தொடங்கிய 8 நாட்களில் ஒரு லட்சத்தைக் கடந்தது. பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 1,04,611 பேர் விண்ணப்பித்துள்ளனர். 74,309 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். 56,935 பேர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
புதிய படிப்புகள், பொறியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றால் பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும், கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.