மனோன்மனிய சுந்தரனார் பல்கலைகழக தேர்வு மற்றும் இதர கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி வ.உசி,காமராஜர் மற்றும் பிஷ்ப் கால்டுவெல் கல்லூரி மாண்வர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மனோன்மனிய சுந்தரனார் பல்கலை கழகத்தின்கீழ் திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பல அரசு மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்பல்கலைகழகத்தில் பயிலும் மாணவ-மாணவியருக்கான தேர்வு கட்டணம் இளநிலை படிப்புகளுக்கு பாடம் ஒன்றுக்கு 100 லிருந்து 140 ஆகவும்,முதுகலை படிப்புகளுக்கு பாடம் ஒன்றுக்கு 160 லிருந்து 220 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் தடையில்லா சான்றுக்கான கட்டணம் 5000 லிருந்து 10,000 ஆகவும் மறுமதிப்பீடு பணிகளுக்கு Form Aக்கு 350 லிருந்து 550 ரூபாயாகவும்,Form Bக்கு 250லிருந்து 350 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.Provisional சான்றிதழுக்கான கட்டணம் 500 லிருந்து 1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைப்போன்று பல கட்டணங்கள் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி வ.உசி.கல்லூரி,காமராஜ் கல்லூரி மற்றும் பிஷப் கால்டுவெல் கல்லூரி அகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறகணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்,பழைய தேர்வு கட்டணத்தையே நடைமுறை படுத்த வேண்டும் இல்லையெனில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை ஒருங்கினைத்து
இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் முற்றுகையிடுவோம் என அச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கார்த்திக் தெரிவித்தார்.
-வேந்தன்







