தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி அருகே பள்ளி ஆண்டு விழாவில்
ஆணிப்படுக்கையில் யோகா செய்து மாணவர்கள் அசத்தினர்.
கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தில், அரசு உதவி பெறும் செண்பகராஜன் நினைவு தொடக்கப்பள்ளியில், 89வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி மற்றும் விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்கள்.
இதனை தொடர்ந்து, பள்ளி குழந்தைகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள்
மற்றும் பாடல்கள் பாடி அசத்தினர். மேலும், ஆணிப்படுக்கையில் யோகா செய்து
பள்ளி மாணவ-மாணவிகள் அசத்தினர். இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
—கு.பாலமுருகன்







