முக்கியச் செய்திகள் சினிமா

‘தி லெஜன்ட்’ கன்னட ட்ரைலர் வெளியானது!

தி லெஜன்ட் திரைப்படத்தின் கன்னட வெளியீட்டு உரிமை அண்மையில் ஒப்பந்தமானது. இந்நிலையில், கன்னட ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் ஃபேன் இந்தியா திரைப்படமாக வரும் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியான இந்த படத்தின் டிரைலரும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லெஜன்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 29 மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்த டீசரை பார்த்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையைக் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 800 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘பழைய பென்ஷன் தொகையை மீண்டும் அறிவிக்க வேண்டும்’ – ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்’

மேலும், தி லெஜன்ட் திரைப்படத்தின் கன்னட வெளியீட்டு உரிமை தற்போது ஒப்பந்தமாகியுள்ளது. இந்த தகவல் தி லெஜன்ட் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கன்னட ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ட்ரையிலரை நடிகை தமன்னா நேற்று வெளியிட்டார். இதேபோல் தமிழ், மலையாளம் மொழிகளில் தயாராகியுள்ள ட்ரையிலர் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெளியாகியபோது கிடைத்த ஆதரவைப்போலக் கன்னட ட்ரைலருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்-எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

Web Editor

‘அத்தியாவசிய உணவுப் பொருட்களில் 5% ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’

Arivazhagan Chinnasamy

முகக்கவசம் அணியாததால் அபராதம் – திடீரென நடனமாடிய இளம்பெண்

Halley Karthik