குற்றம்

ஆன்லைன் வகுப்பில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை..

திருவள்ளூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவன் ஆன்லைன் வகுப்பின் போது கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி என்ஜிஓ நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ராகேஷ் பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆன்லைன் வகுப்பின்போது பாடத்தை கவனிக்காமல் மாணவன் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். இதனால், அதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இருந்த மாணவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஏடிஎம் கொள்ளை சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் பின்னணி

Vandhana

போலி இன்சூரன்ஸ் நிறுவனம்…. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!

Jeba Arul Robinson

மகள்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்ததால் பெற்றோர் கொலை!

Jeba Arul Robinson

Leave a Reply