சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க முகாந்திரம் உள்ளது: விசாரணை ஆணையம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க முகாந்திரம் உள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நேர்மையானவர் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்று கலையரசன் தலைமையிலான…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க முகாந்திரம் உள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நேர்மையானவர் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மை இல்லை என்று கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. சூரப்பாவிடம் விசாரணை நடத்துவதற்கு முகாந்திரம் உள்ளது என்றும், அதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரை அடுத்த வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும், விரைவில் கால நீட்டிப்புக்கான ஆணையை அரசு வெளியிடும் என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply