லடாக் எல்லையில் உள்ள இந்திய பகுதி, சீனாவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர் கூறியதாவது, கிழக்கு லடாக் எல்லையில் உள்ள நிலவரம் தொடர்பாக, மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில், பிங்கர் நான்கு பகுதியிலிருந்து பிங்கர் மூன்று பகுதிக்கு, நமது படைகள் நிலை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பிங்கர் நான்கு பகுதி, நமது நாட்டின் பகுதி என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அதனை ஏன், சீனாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி துணிச்சல் மிக்கவர் அல்ல என்றும், அவரால் சீனாவுக்கு எதிராக நிற்க முடியாது என்றும் ராகுல் விமர்சித்தார். ராணுவ வீரர்களின் தியாகத்தை மோடி அவமதித்துவிட்டதாகவும், அந்த தியாகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.