முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்  தொடரில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி, கடைசி பந்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இலங்கை அணியை இந்திய அணி இன்று எதிர்கொள்கிறது. துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்று நடைபெறும் மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை அணிகள் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2022-23க்கான தொழில் வரி- சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

Web Editor

கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியீடு

Web Editor

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்!

G SaravanaKumar