மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததையடுத்து முதன் முறையாக ஐநா சார்பில் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷ்ரானர் பர்கனர், அந்நாட்டின் ராணுவ தலைமையிடம் தொடர்பு கொண்டதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸால் தற்போது தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பேச்சுவார்த்தையில் தங்களது நிலைப்பாட்டினை தெளிவாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பர்கனர் கூறுகையில், “தற்போதைய இந்த ராணுவ சதியின் நிலைமையை மாற்றுவதற்கான அனைத்துவிதமான முயற்சிகளும் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக மியான்மரின் ராணுவ சதி செயலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: