இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவு!

இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது.…

இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. இதையடுத்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் கட்டடங்களை விட்டு வெளியேறினர். இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், அப்பகுதியில் அடுத்தடுத்து 5 நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து, சுமத்ரா தீவு மக்கள், ஊரை விட்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் இரண்டு மணிநேரத்திற்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.