முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனியாக ஒரு குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். இதனையும் மீறி சில சம்பவங்கள் இதுபோன்று நடக்கிறது. சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேர் மதுரை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு வெடி விபத்து தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி உள்ளேன். நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

முதலமைச்சர் இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்கிறார்.கூடுதலாக கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும். உரிமம் ஒருவர் பெயரில் எடுத்துக் கொண்டு மற்றொருவர் பட்டாசு ஆலை நடத்தினால் அது சட்டப்படி தவறு. அவரது உரிமம் ரத்து செய்யப்படும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பட்டாசு தொழிலையும் பாதுகாக்க வேண்டியும் உள்ளது. பட்டாசு விபத்துகளை தடுக்க வேண்டியும் உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஷமி – பும்ராவின் அதிரடி ஆட்டம்; இந்திய அணி அபார வெற்றி

G SaravanaKumar

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

Web Editor

’ஒவ்வொரு கலைக்கும் சமுதாயப் பொறுப்புகள் இருக்கின்றன’: நடிகர் நாசர் அறிக்கை

EZHILARASAN D